‘பின்பகுதியை முழுமையா சிதைச்சிருக்காங்க’!.. குடும்பத்தினர் சொன்ன அதிர்ச்சி தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளத்தை சேர்ந்த செல்போன் கடை வியாபரிகளான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் நடத்திய தாக்குதலில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
![Sathankulam lockup death issue family demand case file against police Sathankulam lockup death issue family demand case file against police](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/sathankulam-lockup-death-issue-family-demand-case-file-against-police.jpg)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தவர்கள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ். ஊரடங்கு சமயத்தில் கடையை அதிகநேரம் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, அவர்கள் இருவரையும் விசாரணைக்காக போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
சாத்தான்குளம் கொடூரம்....
"என் சகோதரரின் பின்பகுதி முழுமையாக சிதைக்கப்பட்டுள்ளது...!"
எங்களுக்கு நியாயம் வேண்டும்.... உயிரிழந்த வியாபாரிகளின் குடும்பத்தார் கண்ணீர் பேட்டி #சாத்தான்குளம் | #Thoothukudi | #கோவில்பட்டி | #CustodialDeath pic.twitter.com/p90xaNvbyv
— News7 Tamil (@news7tamil) June 25, 2020
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர். அதில் தனது சகோதரனது பின்பகுதி முழுவதுமாக சிதைக்கப்பட்டுள்ளதாக கண்கலங்க தெரிவித்துள்ளனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)