'நான் கொரோனா வார்டுல வொர்க் பண்ணல...' 'டாக்டரை டார்ச்சர் பண்ணின பக்கத்துக்கு வீட்டுக்காரர்...' வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 07, 2020 01:05 PM

மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவரை கொரோனா தொற்று உள்ளது எனக் கூறி பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் துன்புறுத்தும் வீடியோ வெளிவந்ததை அடுத்து தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளது.

A person harassed the doctor that corona was transmitted

தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் அனைத்து தள மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

டாக்டர் சஞ்சீவனி என்பவர் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு தனிப்பிரிவு அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் டாக்டர் சஞ்சீவனி அவர்கள் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் இருக்கும் மற்றொரு தம்பதியினர், சஞ்சீவனி மருத்துவமனையில் இருந்து வருவதால் இங்கு இருக்கும் நமக்கும் கொரோனா வைரஸை பரவி விடப்போகிறார் என்று கூறி தகாத வார்த்தைகளால் டாக்டர் சஞ்சீவனியை திட்டியுள்ளார். தான் கொரோனா பிரிவில் பணிபுரியவில்லை என எவ்வளவோ சொல்லியும் கேட்காத அத்தம்பதியினர் மேலும் மேலும் டாக்டர் சஞ்சீவனியை துன்புறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்தான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரல் ஆகியுள்ளது.

வெளிவந்த இந்த வீடியோவை அடுத்து தேசிய பெண்கள் ஆணையம் குஜராத் போலீசாருக்கு பெண் மருத்துவரை துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேசிய பெண்கள் ஆணையம் இந்த சம்பவம்  குறித்து விசாரிக்க குஜராத்தின் காவல் ஆணையர் சிவானந்த் ஐ.பி.எஸ். கடிதம் எழுதியுள்ளனர்.

தேசிய பெண்கள் ஆணையம் எழுதிய கடிதத்தில் 'அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சஞ்சீவனிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், நடந்த இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் விசாரணை அறிக்கையானது பெண்கள் உரிமை அமைப்பிற்கு அனுப்பவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கொரோனா வைரஸின் மீதிருந்த அச்சத்தால் ஒரு சிலர் எந்த வித விழிப்புணர்வும் இல்லாமல் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது பெருகிவருவதாக சமூகவலைத்தளங்களில் ஒரு சிலர் குறிப்பிடு வருகின்றனர்.

Tags : #DOCTOR