'சவுதியில் இருந்து இந்தியா வந்த பெண்ணுக்கு... கொரோனா பரிசோதனை செய்த மருத்துவர்!'... குடும்பத்துக்கே நேர்ந்த கொடுமை!... கல் நெஞ்சையும் கரைய வைக்கும் துயரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு குடும்பத்துடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மஜ்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் மனைவி, மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, மருத்துவருக்கு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாகப் பரவியதா அல்லது சிகிச்சை பெற்றவர்கள் மூலமாகப் பரவியதா என அவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
இதன் விளைவாக, சவுதி அரேபியாவிலிருந்து இந்தியா வந்த 38 வயதுப் பெண்ணிடம் இருந்து மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பரவியது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 12ம் தேதி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட அந்தப் பெண்ணுக்கு அடுத்த மூன்று நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் அடுத்த 5 நாளில் கொரோனா தொற்று உறுதியானது.
அதன்பின் அந்தப்பெண்ணின் நெருங்கிய உறவினர்கள், காரில் அழைத்து வந்த டிரைவர், மருத்துவரின் குடும்பம் என 72 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், மார்ச் 12 முதல் 18 வரை அந்த மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்ட அனைத்து மக்களும் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மற்ற மருத்துவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. பரிசோதனையில் மருத்துவரின் மகளுக்கும், மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் இருந்து நம்மைக் காக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய சூழலில், கொரோனா தொற்று பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள செய்தி மக்களிடையே பெரும் அனுதாப அலையை உருவாக்கியுள்ளது.
