'சென்னை டாக்டருக்கு கொரோனா...' 'விமான நிலைய பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தவர்...' தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கும் சுகாதாரத்துறை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்து வந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள ஒரு ஹெல்த் சென்டரில் வேலை பார்த்து வரும் மருத்துவருக்கு இன்று கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் சில நாட்களாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார். 16.03.2020 முதல் இவர் பப்ளிக் ஹெல்த் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார், அங்கே பணிபுரிந்த நேரத்தில் 26 பேர் இவரிடம் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.
மேலும் இவருடைய குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் இவருடைய வெளி தொடர்பில் இருந்த 5 பேர் என மொத்தம் 36 பேருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளது, அவர்களுக்கு சுகாதார துறை மூலமாக அவர்களுடைய தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மேற்படி அவர்களுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக தகவல் கொடுக்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.