'50 மணி நேரம்...' '2,500 கிலோமீட்டர்...' '5 மாநிலங்களைக் கடந்து...' ஆச்சரியமூட்டும் 'சாகசப் பயணம்...' 'மகளை' மீட்ட 'தந்தையின்' பாசப் 'போராட்டம்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 26, 2020 03:39 PM

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வரும் சூழலிலும், தனது மகளை காப்பாற்ற மருத்துவர் ஒருவர் மேற்கொண்ட சாகச பயணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

doctor drives 50 hours to bring his daughter from rajasthan

ஜார்க்கண்ட் மாநிலம் போகராவைச் சேர்ந்த 49 வயதாகும் மருத்துவர் ஒருவரின் 18 வயது மகள், ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்தது. ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வந்தன. மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் ராஜஸ்தானில் படித்து வரும் தனது மகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என நினைத்த மருத்துவர், அவளை எப்படியாவது பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்து விட வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டு விட்டதால் சாலை வழியாகத் தான் மகளை அழைத்து வர வேண்டும். பேருந்து சேவைகளும் சில பகுதிகளில் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் தனது காரிலேயே சென்று மகளை அழைத்துவர திட்டமிட்டார்.

கடந்த 22ஆம் தேதி நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். அதேநாளில் தனது மகளை அழைத்து வர காரில் கிளம்பியுள்ளார். 50 மணி நேரத்தில் சுமார் 2,500 கி.மீ தூரம் பயணித்து தனது மகளை மீட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார்.அதாவது 5 மாநிலங்களைக் கடந்து சென்று ஆச்சரியமூட்டும் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இதுபற்றி அந்த பெண் கூறுகையில், எனது தந்தை ஒரு 'சூப்பர் டாட்' என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.  ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், வழியாக ராஜஸ்தான் சென்ற மருத்துவர், இது தன் வாழ்நாளில் மறக்க முடியாத பயணமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #LOCKDOWN #JARKHAND #RAJASTHAN #5 STATES #50 HOURS #DOCTOR