மூணு வருஷமா 'பேசிட்டு' இருந்தவ... திடீர்னு 'நிப்பாட்டிட்டா'... கொடூரத்தில் முடிந்த 'கள்ளக்காதல்' விவகாரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தாம்பரத்தை அடுத்த புது பெருங்குளத்தூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் கார் டிரைவராக உள்ள நிலையில், இவரது மனைவி யசோதா ராணி அதே பகுதியில் டெய்லர் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் யசோதா ராணி தனது கடையில் துணி தைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் யசோதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபத்தில் அந்த நபர் கத்தரிக்கோலை எடுத்து யசோதா ராணியின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் யசோதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அந்த பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு வந்த போலீசார், யசோதா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த மூன்று ஆண்டுகளாக சேலையூர் கணபதிபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும், யசோதா ராணிக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக தப்பியோடிய செல்வகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது, தன்னுடனான தொடர்பை யசோதா ராணி திடீரென துண்டித்து பேசாமல் இருந்ததால் தான் அவரை கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்
