"முப்பது வருஷமா காணாம போச்சு"... "இப்போ பாருங்க" ... ஊரடங்கால் 'பளிச்சென' தெரியும் 'மலை' தொடர்கள்... மகிழ்ச்சியில் திளைத்த காஷ்மீர் மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 24, 2020 10:01 PM

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் தொழிற்சாலைகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன. இதன் காரணமாக காஷ்மீரில் உள்ள பீர் பாஞ்சால் மலைத்தொடர்கள் தெளிவாக தென்படுகின்றன.

Hills in Kashmir and Punjab visible amid lockdown

முன்னதாக தொழிற்சாலைகளில் இருந்து ஏற்படும் கரும்புகை, வாகனத்தில் இருந்து வெளிவரும் புகை, காற்று மாசு ஆகியவற்றின் காரணமாக இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் பாஞ்சால் மலைத்தொடர்கள் மனிதர்களின் கண்ணில் படாமல் இருந்து வந்தன. இந்நிலையில் தற்போதுள்ள ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் சுற்றுசூழல் மாசு வெகுவாக குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு இல்லாத அளவில்  மாசு குறைந்து போயுள்ளது.

அதே போல பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பகுதி மக்கள் வீட்டிலிருந்தே இமயமலையின் ஒரு பகுதியான தால் ஆதர் மலையை காண முடிகிறது என தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தொலைவில் அந்த மலைப்பகுதி இருக்கிறது. அது மட்டுமில்லாது கடந்த முப்பது ஆண்டுகளில் தற்போது தான் தால் ஆதர் மலை தெளிவாக தெரிகிறது என மக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.