மொத்தமாக எடுத்துச் செல்லப்பட்ட 'பட்டாசு'...எதிர்பாராத நேரத்தில் மத ஊர்வலத்தில் நிகழ்ந்த 'பயங்கரம்'... கதறித் துடித்த பெற்றோர்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 09, 2020 09:22 AM

பஞ்சாப்பின் டார்ன் தரன் மாவட்டத்தில் நடைபெற்ற மத ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 15 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fireworks accident at a religious procession - 15 people killed

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள டார்ன் டாரன் மாவட்டத்தில் பாகு என்ற கிராமத்தில் சீக்கியர்களின் பாரம்பரிய திருவிழாவை முன்னிட்டு நாகர் கிர்டன் என்னும் ஊர்வலம் நடந்தது. பாபா தீப் சிங் என்பவரின் பிறந்த நாள் விழாவையொட்டி நடந்த அந்த ஊர்வலத்தின் போது வாணவேடிக்கை காட்டுவதற்காக  டிராக்டர் மற்றும் தள்ளுவண்டி நிறைய பட்டாசுகளை எடுத்து சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் பட்டாசுகள் வெடித்ததால் அருகிலிருந்த சுமார் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகக் கூறப்படுகிறது. 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் 18-19 வயதுக்குட்பட்டவர்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : #PUNJAB #FIREWORKS ACCIDENT #RELIGIOUS PROCESSION #15 PEOPLE KILLED