'கோழிக் கூவுறதுக்கு முன்னாடியே வந்து...' 'அசந்து தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை...' பையனின் 'காதலுக்காக' பெற்றோர்களும் சேர்ந்து செய்த அதிர்ச்சிக் காரியம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 10, 2020 05:28 PM

சேலம் மாவட்டம் ஆருர்பட்டியில் 14 வயது சிறுமியை, குடும்பத்தோடு வந்து கடத்திச் சென்ற வாலிபரை ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The teenager abducted a 14-year-old girl with her family.

ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலம் ஒன்றியம் சேடப்பட்டி ஊராட்சி  கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (40). இவர் அதே பகுதியில் தையல் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா 36 இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும் 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் சேடப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சௌந்தரராஜன் 24 என்ற வாலிபர், ஜெய்கணேஷின் மகள் பள்ளிக்குச் செல்லும்போது அவ்வப்போது கேலி கிண்டல் செய்து வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 5 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஜெய்கணேஷின் மகள் தூங்கிக்கொண்டு இருந்தபோது சௌந்தரராஜன், அவரது தந்தை சின்னகண்ணன், தாய் பழனியம்மாள், உறவினர் சித்தன் உள்ளிட்ட 4 பேரும் மாணவியின் வீட்டுக்கு வந்து அவரது மகளை திருமணம் செய்து வைக்க கடத்திச் சென்றுள்ளனர்.

இது குறித்து மாணவியின் தாய் மேகலா ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனது 14 வயது மகளை திருமணம் செய்துகொள்ள கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் தேடிவந்தனர். தொடர்ந்து ஜலகண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த சௌந்தரராஜனை கைது செய்து பள்ளி மாணவியை மீட்டனர். தொடர்ந்து மாணவியை கடத்தி சென்ற வாலிபரை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Tags : #KIDNAPPED