'பாஸ் நீங்க ஒரு ஹீரோ மெட்டீரியல்'...'துணை நடிகை பெயரில்'... ஆசையை கிளப்பி சென்னையில் துணிகரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 21, 2019 04:25 PM

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜாவித். ஆட்டோ ஓட்டுநரான இவர், ஓலா நிறுவனத்தில் பதிவு செய்து ஆட்டோ ஓட்டி வருகிறார். இதனிடையே கிண்டி கத்திபாராவில் வைத்து இவருடைய ஆட்டோவை பதிவு செய்த நபர், சாலிகிராமம் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து ஆட்டோவில் ஏறிய நபர் நைசாக ஆட்டோ ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்துள்ளார். தனது பெயர் துரை என்றும் சினிமா ஏஜென்டாக இருப்பதாகவும் ஜாவித்திடம் அவர் கூறியுள்ளார்.

Man used Cinema side actress name and stolen auto in Chennai

இதையெல்லாம் நம்பிய ஜாவித், தனக்கு ஏதாவது வாய்ப்பு வந்தால் சொல்லுங்கள் என கூறியுள்ளார். அப்போது அந்த ஆசாமி கண்டிப்பாக கூறுகிறேன். நீங்களும் பார்ப்பதற்கு அழகாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அப்போது எனக்கு துணை நடிகைகள் பலரையும் தெரியும் எனவும், அவர்களை ஆட்டோவில் அழைத்து செல்லலாம் என ஆசையை தூண்டும் விதத்தில் பேசியுள்ளார்.

இதையடுத்து சாலிகிராமம் வந்த உடன் தேநீர் கடையில் ஆட்டோ ஓட்டுநரை இறங்க சொல்லி கூறி விட்டு, தெருவில் கடைசியில் உள்ள மூன்று துணை நடிகைகளையும் தான் அழைத்து வருவதாகவும் அதுவரை காத்திருக்க கூறிவிட்டு ஆட்டோவை அந்த நபர் எடுத்துச் சென்றுள்ளார்.

இதனிடையே இதோ வருகிறேன் என போன நபர் வராததால் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஜாவித் அந்த நபர் சொன்ன தெருவிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. ஜாவித்திடம் நைசாக பேசிய அந்த மோசடி பேர்விழி, ஆட்டோவை திருடி சென்றுள்ளார். இதனையடுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆட்டோவை ஏமாற்றி திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர் .

Tags : #ROBBERY #CHENNAI #AUTO #OLA #SALIKIRAMAM