'வேலூர் புதுமண தம்பதிக்கு'...'சர்ப்ரைஸ்' கொடுத்த 'பிரதமர் மோடி'...'ஆச்சரியத்தில் நெகிழ்ந்த குடும்பம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 09, 2019 01:18 PM

வேலூரைச் சேர்ந்த மணமக்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Vellore newly married couple received a letter from the PM Modi

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் வசித்து வருபவர் டி.எஸ்.ராஜசேகரன். இவர் வட்டார மருத்துவ ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகளின் திருமணம், நாளை மறுநாள் ராணிப்பேட்டையில் நடைபெற உள்ளது. இதையடுத்து திருமணத்தில் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வேண்டுமென,  பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜசேகரன் திருமண அழைப்பிதழை தபால் மூலம் அனுப்பி வைத்தார்.

இதனிடையே திருமண வேலைகளில் பிஸியாக இருந்த ராஜசேகரனுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து தபால் ஒன்று வந்தது. அந்த தபால் அவர்களை திக்குமுக்காட செய்துள்ளது. அந்த தபாலில்  ''என்னை திருமணத்துக்கு அழைத்தமைக்காக நன்றி. மணமக்களுக்கு வாழ்த்துகள்''  என பிரதமர் மோடியின் கையொப்பமிட்ட திருமண வாழ்த்து மடல் இருந்தது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத ராஜசேகரனின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்கள். பிரதமரின் அன்பும், வாழ்த்தும் தங்களுக்கு எதிர்பாரா மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மணமக்கள் மற்றும் திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர்.

Tags : #NARENDRAMODI #BJP #VELLORE #WEDDING