''போலீசாரால் தாக்கப்பட்ட 19 வயது சிறுவன்...' 'ஹார்ட் அட்டேக்க்கில் மரணம்...' சாத்தன்குளம் சம்பவத்தை அடுத்து மற்றுமொரு சோகம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரில் போலீசாரால் தாக்கப்பட்ட 19 வயது சிறுவன் மாரடைப்பால் இறந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பரபரப்பில் ஆளாக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்று மரணமடைந்த நிலையில், தற்போது காவலரால் தாக்கப்பட்ட சிறுவன், மாரடைப்பு ஏற்பட்டு இறந்த செய்தி வெளியாகியுள்ளது.
பெங்களூர் பிஜாப்பூர் மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி பரீட்சை எழுத வந்த 19 வயது இளைஞன் காவல்துறையினரால் லத்தியால் அடித்ததாக கூறப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி பரிட்சை மையத்தை கண்காணித்து வரும் காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்த சிறுவன், தன் வேறொரு நண்பனுக்கு பரீட்சையின் போது உதவ முற்பட்டதாகவும், தேர்வு மையத்தை சுற்றி சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் சிறுவனை நெருங்க முற்பட்டபோது அவர் பைக்கில் ஏறி தப்பித்ததாகவும், அப்போது காவலர் சிறுவனின் பைக்கை தாக்கியதில் அடிக்கும் போது சிறுவன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுவனின் குடும்பத்தார் இந்த கருத்திற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இறந்த சிறுவன் அவர் தனது சகோதரியை கைவிட மட்டுமே சென்றதாகவும், எந்த முறைகேடிலும் ஈடுபடவில்லை என்றும் கூறுகின்றனர். போலீசார் தான் தன் மகனை தாக்கி இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளனர் என்று கூறியுள்ளனர். மேலும் 19 வயது சிறுவனின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.