‘என் சந்தேகம் இன்னும் தீரல!’.. ஆத்திரத்தில் 17 முறை கத்திக்குத்து.. மனைவிக்கு நேர்ந்த கதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த உமேஷ் என்பவர் திருமணமாகி 7 வருடம் ஆன நிலையில் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் வந்ததை அடுத்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்தத் தகராறினால் இருவரும் 1 வருடத்துக்கு முன்பாக பிரிந்தனர். இதனை அடுத்து இருவரின் குடும்பத்தாரும் உமேஷ்-இந்திரா தம்பதியிடம் பேசி சமாதானம் செய்து சேர்ந்து வாழச்சொல்லி அறிவுறுத்தினர். ஆனால் மீண்டும் இந்திராவின் நடத்தையில் சந்தேகப்பட்ட உமேஷ் அவருடன் சண்டையிடத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த உமேஷ் 17 முறை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த இந்திராவை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மருத்துவர்களோ 17 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதால் இந்திரா மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் உமேஷை கைது செய்தும் வழக்குப்பதிவு செய்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
