பொண்டாட்டிய கொல பண்ண... கார் ஆக்ஸிடண்ட், பாம்பு 'கடி'ன்னு... ஆறு மாசத்துல நெறய பிளான் பண்ணிருக்காரு, கடைசி'ல... மனதை உறைய வைக்கும் 'பின்னணி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Jun 25, 2020 10:30 AM

அமித் அகர்வால் என்ற 42 வயது நபர், தனது மனைவி ஷில்பியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூரிலுள்ள மனைவியின் குடியிருப்பில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து கொல்கத்தா சென்ற அமித் தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

Man makes lot of plans to kill his wife in last 6 months

அமித்தின் மாமனார் அங்கிருந்து தப்பி ஓடி விட்ட நிலையில், இந்த சம்பவம் இரு பகுதிகளிலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், அமித்தின் 67 பக்கம் கொண்ட தற்கொலை குறிப்பு போலீசாருக்கு கிடைத்துள்ளது.

அவரது 67 பக்க தற்கொலை குறிப்பில் 'இது எனது வாழ்க்கையின் மகாபாரதம்' என அமித் குறிப்பிட்டிருந்தார். அமித் மற்றும் அவரது மனைவிக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக விவாகரத்து வழக்கு நடைபெற்று வந்துள்ளது. இதனிடையே தனது மனைவியை தீர்த்துக்கட்ட வேண்டி கடந்த ஆறு மாதங்களாக திட்டம் தீட்டி வந்துள்ளார். அதற்காக, பெங்களூரில் இருந்து கொலையாளியை ஒப்பந்தம் செய்ய பீகார் சென்றுள்ளார். அதே போல, பாம்பு வைத்து கடித்து கொலை செய்ய வேண்டி தமிழகமும் சென்றுள்ளார்.

தனது மனைவியை பாம்பை வைத்து கடித்து கொலை செய்யவும், கார் ஏற்றி கொலை செய்யவும், அதே போல கொலையாளி ஒருவரை வைத்து கொலை செய்யவும் திட்டம் திட்டியதாக தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் யாரையும் நம்ப வேண்டாம் என முடிவு செய்து தானே கொலை செய்ய முடிவு செய்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல கொல்கத்தாவில் உள்ள தனது மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரையும் கொலை செய்ய வேண்டி கொல்கத்தாவில் அவர்களது குடியிருப்பின் அருகே இவர் ஒரு குடியிருப்பில் வசித்து வந்ததாக தெரிகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பெங்களூரில் மனைவி ஷில்பி குடியிருந்த அபார்ட்மெண்ட் சென்ற அமித், தனது மகனை அங்கிருந்த கெஸ்ட் ரூமில் உட்கார வைத்து விட்டு மனைவி பிளாட்டிற்கு சென்று கதவைத் தட்டியுள்ளார். அப்போது மனைவி கதவைத் திறந்ததும், அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து மகனை அழைத்துக் கொண்டு கொல்கத்தா சென்று மகனை சகோதரனின் வீட்டில் விட்டு, மாமனார் வீட்டுக்கு வருவதற்கு முன் அவர்கள் பிளாட்டின் அருகிலுள்ள தனது வீட்டிற்கு சென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மாமனார் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man makes lot of plans to kill his wife in last 6 months | India News.