காதலனுக்கு வேறு பெண்ணுடன் 'நிச்சயதார்த்தம்'... 'பெங்களூரு' டூ 'திருப்பூர்'... விரைந்த பெண்ணிற்கு காத்திருந்த 'சோகம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 06, 2020 08:40 PM

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே ஆயிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெங்களூரில் ஐ.டி துறையில் பணிபுரிந்து வருகிறார்.

Lover boy gets engaged with another one in Tirupur

இவருடன் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக ஊழியர்கள் அனைவரும் நிறுவனத்தை விட்டு தங்களது சொந்த ஊர் திரும்பி பணிபுரிந்து வரும் நிலையில் அந்த வாலிபரும் திருப்பூர் வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில், சொந்த ஊர் வந்த வாலிபருக்கு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனைத்  தொடர்ந்து தனது காதலியுடன் சரிவர அந்த வாலிபர் பேசாமல் இருந்து வந்த நிலையில் அந்த பெண் அலுவலக நண்பர்களிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது தான் தனது காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தகவல் தெரியவர, அந்த பெண் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.

தனது காதலனின் திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டி கர்நாடக அரசிடம் அனுமதி பெற்று இருச்சக்கர வண்டியில் குன்னத்தூர் வந்தடைந்துள்ளார். தன்னைத் தேடி காதலி சொந்த ஊருக்கே வந்த தகவலறிந்த வாலிபர் அதிர்ச்சியடைந்த நிலையில் தனது சொந்த ஊருக்கு செல்லுமாறு மிரட்டி அந்த பெண்ணை அடித்து உடைத்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

பின்னர் அந்த வாலிபரின் குடும்பத்தினர் அந்த பெண்ணிடம் பேசி சொந்த ஊருக்கே செல்லுமாறு கூறிய நிலையில் பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் அந்த பெண்ணும் அழுதுகொண்டே காரில் பெங்களூர் செல்ல முடிவு செய்து கிளம்பியுள்ளார். காதலனுக்கு வேறு திருமணம் நடந்த தகவல் அறிந்து வந்த பெண்ணை காதலனே அடித்து உதைத்து திருப்பி அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.