‘சாப்பாடு கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி’.. ‘போதையில் கணவர் செய்த கொடூரம்!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 16, 2020 12:15 PM

பெங்களூருவைச் சேர்ந்த 49 வயதான நாராயணப்பா. இவருடைய மனைவி 45 வயதான கெங்க பைரம்மா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் நாராயணப்பா அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கும் வரும் அளவுக்கு மதுவுக்கு அடிமையாகி இருந்தது தெரிந்தது.‌ இதனால் தினமும் வேலை முடிந்துவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் குடித்துவிட்டு வந்து தன் மனைவியிடம் தகராறு செய்துவந்தார்.

drunk man kills wife after refusing to give food in Bangalore

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாராயணப்பா, மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருடைய மனைவியிடம் தனக்கு சாப்பாடு போடும்படி கேட்டுள்ளார். மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவருக்கு சாப்பாடு கிடையாது என்று மனைவி கெங்க பைரம்மா சாப்பாடு கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாராயணப்பா, மனைவியை அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல் மேலும் ஆத்திரம் தீராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன் மனைவியை குத்திக் கொலை செய்தார்.

இதனால் கெங்க பைரம்மா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.  அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கெங்க பைரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்த நாராயணப்பா போலீசில் சரணடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : #BANGALORE