'கணவனை கல்லால் அடித்துக்கொன்ற மனைவி'... 'திருமணமான 5 மாதத்தில் நடந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 14, 2019 11:05 AM

திருமணமாகி 5 மாதமே ஆன நிலையில், தன் கணவரை கல்லாலேயே மனைவி அடித்து, மாமனார் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

wife killed her husband with stones in tharangambadi

நாகை மாவட்டம்  தரங்கம்பாடி அருகே தலைச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், அப்பராசபுத்தூர் கிராமத்தை சேர்ந்த கலைமதி என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்து, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு  காரணமாக தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உறவினர் வீட்டுக்கு சென்ற சதீஷ்குமாரை, வழியில் சந்தித்த அவரது மனைவி கலைமதி மற்றும் மாமனார் நாகராஜ் வாக்குவாத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பின்பு கணவரை கலைமதி கல்லால் தாக்க, மாமனார் நாகராஜ் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது தொடர்பாக சதீஷ்குமாரின் மனைவி கலைமதி மற்றும் அவரது தந்தை நாகராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #THARANGAMBADI