‘ஒரேயொரு லேப்டாப், 7 லட்சம் கோடி ரூபா சேதம்..!’ ஏலத்திற்கு வந்துள்ள உலகின் மிக ஆபத்தான லேப்டாப்..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Saranya | May 27, 2019 07:30 PM

உலகில் மிக ஆபத்தானதாகக் கருதப்படும் 6 வைரஸ்கள் நிறைந்த லேப்டாப் ஒன்று ரூ.8.35 கோடிக்கு ஏலத்திற்கு வந்துள்ளது.

worlds dangerous laptop on auction for 8.35 crores

ஐ லவ் யூ, மை டூம், சோ பிக், வான்ன கிரை, டார்க் டக்கீலா, பிளாக் எனர்ஜி எனப் பெயர் கொண்ட இந்த 6 வைரஸ்களால் இதுவரை  ஏற்பட்ட சேதம் 7 லட்சம் கோடி ரூபாய். சாதாரண விண்டோஸ் XP அமைப்பில் செயல்படும் ஒரு லேப்டாப் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் வந்துள்ளதற்கு இந்த வைரஸ்களே காரணம்.

சாம்சங் நிறுவனத்தால் 2008ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த லேப்டாப்பில் மேற்கூறிய வைரஸ்களை க்யோ ஓ டாங் என்பவர் உட்புகுத்தியுள்ளார். இந்த லேப்டாப் உடன் யாராவது ஏதேனும் தொடர்பை ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் மிகவும் கொடுமையானதாக இருக்கும். பிரிட்டனின் தேசிய சுகாதாரத்துறைக்கு ரூ.700 கோடி வரை சேதத்தை ஏற்படுத்திய இந்த வைரஸ்கள் தொழில்நுட்ப உலகைக் கடந்து சாதாரண மக்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சுமார் 2 லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ்கள் கொண்ட லேப்டாப் ஒரு தனித்த அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ‘குழப்பங்களில் நிலைத்தன்மை’ என அழைக்கப்படும் இந்த லேப்டாப் தற்போது இணையத்தில் ஏலத்திற்கு வந்துள்ளது.

Tags : #SAMSUNG #DANGEROUS #LAPTOP