'ஏன் சமைக்கலன்னு கேட்டது ஒரு குத்தமா'?...'கணவருக்கு' கிடைத்த தண்டனை...சென்னையில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 02, 2019 04:02 PM

ஏன் உணவு சமைக்கவில்லை என கேட்ட கணவரை,கரண்டியால் மனைவி அடித்த சம்பவம்,சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WIfe Attack husband in chennai police file a complaint

சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள பொன்னுவேல் புரத்தில் கொத்தனார் வேலை செய்து வரும் கார்த்திக் என்பவர் தனது மனைவி தனலட்சுமியுடன் வசித்து வருகிறார். அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் தனலட்சுமியின் சித்தி பழக்கடை வைத்திருப்பதால்,தனலட்சுமி அவ்வப்போது அங்கு சென்று விடுவது வழக்கம். இதனால் சரியான நேரத்தில் வீட்டில் உணவு சமைக்காமல் இருப்பது குறித்து,கார்த்திக் அவ்வப்போது கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கார்த்திக் வீட்டில் உணவு இல்லாதது குறித்து கோபமடைந்துள்ளார்.மனைவி தனலட்சுமி வீட்டில் சமைக்காமல் சித்தியின் பழக்கடைக்கு சென்று விட்டு தாமதமாக வந்துள்ளார்.இது குறித்து கார்த்திக் தனது மனைவியிடம் கேட்டுள்ளார்.இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட,தனலட்சுமி தனது சித்தி அபிராமியை அழைத்து வந்து கார்த்திகை சமையல் கரண்டியால் தாக்கியுள்னர்.

இதில் நெற்றி,இடது புருவம் மற்றும் முன்னங்கையில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக்கிற்கு நெற்றியில் 4 தையல் போடப்பட்டது.இதையடுத்து அயனாவரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : #HUSBAND #WIFE #CHENNAI CITY POLICE #COOKING