‘இளவரசர்’ ஹாரி - மேகன் தம்பதியின் ‘திடீர்’ அறிவிப்பால்... ‘அதிர்ச்சியில்’ இங்கிலாந்து ‘அரச’ குடும்பம்...
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Jan 10, 2020 12:08 AM
இங்கிலாந்து அரச குடும்ப உயர் பொறுப்புகளிலிருந்து தாங்கள் விலகுவதாக இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி அறிவித்துள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகனான இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் மார்கலை காதலித்துத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹாரி மற்றும் அவருடைய மனைவி மேகனுக்கு, அரசு குடும்பத்துடன் கருத்து வேறுபாடு இருப்பதாக சில மாதங்களாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. ஆனால் அவற்றை வெறும் வதந்தி என இங்கிலாந்து அரசு குடும்பம் அறிவித்தது. இதையடுத்து தற்போது புது வருடத்தில் ஆச்சரியமான முடிவு ஒன்றை இளவரசர் ஹாரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இளவரசர் ஹாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பல மாத ஆலோசனைகளுக்குப் பிறகு புதிய வருடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய பாதையைத் தொடங்க இருக்கிறோம். தற்போது இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் எங்கள் நேரத்தை செலவிட இருக்கிறோம். பதவியிலிருந்து விலகினாலும் இங்கிலாந்து ராணிக்கு செய்யவேண்டிய எங்கள் பணிகளைத் தொடர்ந்து செய்வோம். நிதி சார்ந்து சுதந்திரமாக செயல்பட இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரியின் இந்த முடிவுக்கு இங்கிலாந்து மக்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
