பெண் கல்வி விழிப்புணர்வுக்காக மாரத்தான் ஓடும் பிரபல நடிகை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | Mar 23, 2019 08:53 PM

பெண் கல்விக்காக நிதி திரட்ட பெங்களூருவில் நடக்கவிருக்கும் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கிறார் பிரபல நடிகை.

South Indian Actress Priyamani is Partcipating in Marathon

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை பிரியாமணி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு தனது காதலர் முஷ்தபா ராஜ்ஜை திருமணம் செய்து கொண்டு கர்நாடக மாநிலத் தலைநகரமான பெங்களூருவில் செட்டிலாகிவிட்டார்.

பின்னர், சுகாதாரம், மாதவிலக்கு ஆகியவற்றால், மாணவிகள் படிப்பைப் பாதியில் விடும் சூழல் இன்றும் நிலவி வருவதால், “பள்ளியில் இருங்கள்”  என்ற பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இந்நிலையில் பெண் கல்விக்காக நிதி திரட்டும் வகையில், பெங்களூருவில் நடக்கும் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்த மாரத்தான் போட்டியானது வரும் மே மாதம் 19 ஆம் தேதி பெங்களூருவில் நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டியில் நடிகை பிரியாமணி கலந்து கொண்டு பெண் கல்விக்காக நிதி திரட்ட இருக்கிறார்.

Tags : #BANGALORE #MARATHON #PRIYAMANI