சிறப்பாக 'கையாண்டு' கொரோனாவை 'வென்ற'... தென் கொரியாவின் 'நிலையே' இங்கும்... வெளியாகியுள்ள 'நிம்மதி' தரும் தகவல்...
முகப்பு > செய்திகள் > உலகம்தென் கொரியா, சீனா போலவே இந்தியாவிலும் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பை சிறப்பாக கையாண்டு கட்டுக்குள் கொண்டு வந்துள்ள தென் கொரியா, சீனா போன்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,780 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 250 ஆகவும் உள்ளது. அதாவது, உயிரிழப்பு எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களில் 2.3 சதவீதமாகவும், மொத்த மக்கள்தொகையில் ஒரு லட்சம் பேருக்கு 0.48 சதவீதமாகவும் உள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 37,257 பேரில் 1,223 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு உயிரிழப்பு விகிதம் பாதிக்கப்பட்டவர்களில் 3.3 சதவீதமாகவும், மக்கள்தொகையில் ஒரு லட்சம் பேருக்கு 0.09 சதவீதமாகவும் உள்ளது. மேலும் கொரோனாவை சிறப்பான நடவடிக்கைகளால் கட்டுக்குள் கொண்டுவந்துள்ள சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 83,959 பேரில் 4,637 பேர் உயிரிழந்துள்ளனர். இது பாதிக்கப்பட்டவர்களில் 5.5 சதவீதமும், மக்கள்தொகையில் ஒரு லட்சம் பேருக்கு 0.33 சதவீதமும் ஆகும்.
