''அந்த ஒருமுறைதான் சச்சின் அழுதார்...'' ''தனியறையில் யாருக்கும் தெரியாமல்...'' 'நினைவுகூர்ந்த கங்குலி...'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Suriyaraj | Apr 30, 2020 12:06 PM

சச்சின் கேப்டனாக இருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் வீரர்கள் அறையில் தனியாக கண்ணீர் விட்டு அழுதார் என கங்குலி நினைவு கூர்ந்துள்ளார்.

Sachin Tendulkar cried only once - remembered Ganguly

கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேனாக பெரும்பாலான சாதனைகளை படைத்துவிட்டார். ஆனால் கேப்டன் பதவியில் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. இதனால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

சச்சின் கேப்டனாக இருந்தபோது சவுரங் கங்குலி இந்திய அணியின் புதுமுகமாக அறிமுகமானார். அப்போது, 1996-97-ல் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகளில் கொண்ட டெஸ்டில் தொடரில் விளையாடியது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தன. 3-வது டெஸ்டில் 2வது இன்னிங்சில் இந்தியாவுக்கு 120 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எப்படியாவது சேஸிங் செய்து 1990-களில் வெளிநாட்டில் தொடரை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுவிடலாம் என நினைத்தார். ஆனால் இந்தியா 81 ரன்னில் சுருண்டது.

அதன்பின் நடைபெற்ற இரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 1-0 எனத் தொடரை கைப்பற்றியது.

போட்டியில் தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் சச்சின் தெண்டுல்கர் வீரர்கள் அறையில் கண்ணீர் விட்டு அழுதார். இந்த ஒரு முறைதான் அவர் அழுதார் என்று கங்குலி நினைவு கூர்ந்துள்ளார்.