'தெருவில்' படுத்துறங்கிய 'போலீஸ்'... "கெடச்ச கேப்புல குட்டி தூக்கம்".. போலீசார்களின் தற்போதைய நிலையை விளக்கும் வைரல் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தேவையில்லாமல் நடமாடுவதை கண்காணிக்க நாடு முழுவதும் போலீசார் இரவு பகல் பாராமல் அயராது உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு போலீசார்கள் தெருவில் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அருணாச்சல பிரதேசம் டிஐஜி மதுர் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனுடன், 'இது போன்ற 8 மணி நேர தூக்கம் விலையுயர்ந்த மெத்தை இல்லையென்றால் கிடைக்குமா?... கிடைக்கும் நீ ஒரு போலீசாக இருந்தால்.. இவர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்' என்ற கேப்ஷனும் அந்த புகைப்படத்துடன் இடம்பெற்றிருந்தது.
கடினமான பணிச்சுமை காரணமாக ஓய்வின்றி உழைத்து வருவதால் கிடைக்கும் இடங்களில் ஓய்வெடுத்து வரும் நிலையில் போலீசாரின் தற்போதைய கடினமான சூழ்நிலையை விளக்கும் இந்த புகைப்படம் நெட்டிசன்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Isn’t comfortable bed and an eight hour sleep such a luxury ?
Yes it is... if you are a cop !
Proud of these #CoronaWarriors pic.twitter.com/3H9ZrZupNp
— Madhur Verma (@IPSMadhurVerma) April 24, 2020