‘இந்தியாவில் ஒரே நாளில்’... ‘அதிகபட்சமாக உயர்ந்த பலி எண்ணிக்கை’... ‘31 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 29, 2020 02:45 PM

கொரோனா பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆயிரத்தை கடந்து உள்ளது.

Coronavirus Deaths in India Cross 1,000 Biggest jump in 24 hours

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இது வரை 31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 31,332 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இது ஒரு நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகபட்சமாகும்.

இதையடுத்து இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,007 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும், இதுவரை 7,696 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் இன்று காலை 24.56 சதவீதமாக உயர்ந்து உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு 2058 ஆக உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிகப்பு மண்டல மாவட்டங்கள் ஒருபக்கம் குறைந்து வருவது நம்பிக்கை அளிக்கக் கூடியதாக உள்ளது.