இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 24, 2019 11:12 AM

1. தந்தை பெரியார் 46-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tamil News important headlines read here for more dec 24

2. குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராடுவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

3. செ‌ன்னை பெரம்பூர் ஐசிஎஃப் நிறுவனம் 215 நாட்‌களில் 3000-வது ரயில் பெட்டியை தயாரித்து சாதனை படைத்துள்ளது.

4. போராடுபவர்களை சுடுவது, தடியடி நடத்துவதன் மூலம் நாட்டின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

5. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கக் கூடாது என்பதற்காகவே ஸ்டாலின் நடைபயணம் மேற்கொள்கிறார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

6. எம்.ஜி.ஆரின் 32-வது நினைவு நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆரின் படத்திற்கு மலர் தூவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செய்தார்.

7. அரியலூர் அருகே மதுபோதையில் அரசுப் பேருந்தை தீ வைத்து எரித்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

8. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டும் என்ற மத்திய சட்ட அமைச்சகத்தின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

9. முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியை நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

10. இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணியின் பும்ரா மற்றும் ஷிகர் தவான் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

Tags : #TOPNEWS #PERIYAR #MGR