ஒரே ஆளின் கிட்னியில் இருந்த 552 சிறுநீரகக் கற்கள்.. ஷாக் ஆன மருத்துவர்கள் செய்தது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 14, 2019 09:58 PM

அதிகம் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகத்தில் கல் பிரச்சனை உண்டாகும் என்பது ஒரு வகையிலான உண்மை.

man found with 552 stones in kidney - bizarre in mumbai hospital

சித்த மருத்துவத்தைப் பொருத்தவரை, சிறுநீரகக் கல் பாதிப்பு பிரச்சனை என்பது பயத்தை குறிக்கும் என்றும் கூட சொல்வார்கள். அப்படிப்பட்ட சிறுநீரகக் கல் என்பது மில்லி மீட்டர் அளவில் இருந்தால், அதை சில வைத்திய முறைகளில் கரைக்கலாம். அதற்கும் அதிகமானால் லேசர் சிகிச்சைகள் இருக்கின்றன. செண்டி மீட்டர் அளவில் இருந்தால், அவற்றை ஆபரேஷன் செய்து எடுக்கலாம்.

ஆனால் ஒரு கல் அல்லது இரண்டு கல்கள் இருந்தாலே இத்தனை சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுவதுண்டு. ஆனால் மும்பையைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவரின், சிறுநீரகத்தில் இருந்து சுமார் 552 கற்கள் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களாக வலியில் தவித்த முதியவர், வலி அதிகமானதால், மும்பை தானே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்குதான் அவருக்கு வலது சிறுநீரகத்தில் 552 கற்கள் இருந்தது தெரியவர, அவை அனைத்தும் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. இவற்றுள் 2 கற்கள் மட்டும் செண்டி மீட்டர் அளவிலானவை. மற்றவை சிறிய கற்கள்தான். இதேபோல் கடந்த 2009-ஆம் ஆண்டு டிசம்பரில் முமபையின் துலே பகுதியில் உள்ள 'யூராலஜி இன்ஸ்டிட்யூட்'டில் தன்ராஜ் வாடில் என்கிற நோயாளிக்கு இடது சிறுநீரகத்தில் 1,72,155 கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை எண்டாஸ்கோப்பி உதவியுடன் அகற்றப்பட்டன.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற இந்த அறுவை சிகிச்சையை ஆசிஷ் ரவண்டேல் என்கிற டாக்டர் வெற்றிகரமாக செய்து முடித்தார்.

குறிப்பு: இந்த செய்தியில் உள்ள படம் சித்தரிப்புப்படம்

Tags : #KIDNEYSTONE #MUMBAI #BIZARRE