‘திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்’.. ‘தீ வைத்து கொல்ல முயன்ற இளைஞன்’.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 12, 2019 07:16 PM

கேரளாவில் திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Girl was set ablaze by a man in broad daylight in

கேரளா மாநிலம் கும்நாட் பகுதியில் 18 வயதான அஜின் ரேஜி மேத்யூ என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவல்லா என்னும் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு அப்பெண் மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இன்று அப்பெண் கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கும் போது வழிமறித்து அஜின் மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனை அப்பெண் மறுக்கவே, ஆத்திரமடைந்த அஜின் தான் கொண்டுவந்த பெட்ரோலை அப்பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே பெண்ணின் மீது எரிந்த தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் தப்பியோட முயன்ற அஜினை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனை அடுத்து அஜின் மேத்யூவை கைது செய்த காவல்துறையினர், அவரின் மீது 302 -பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஆபத்தான நிலையில் உள்ள அப்பெண் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags : #KERALA #WOMAN #FIRE #LOVE #CRIME #BIZARRE