'தோனி இடத்துக்கு இவர் வந்துருவாரு போல'?...தெறித்த ஹெலிகாப்டர் ஷாட்...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 25, 2019 03:41 PM
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் வீரரும்,இடது கை பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
23'ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் தற்போது களைகட்ட தொடங்கியிருக்கிறது.நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் அதிரடியான ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.இளம் வீரர் ரிஷப் பண்ட் சிக்சர்,பவுண்டரி என நாலாபுறமும் பந்தை சிதற விட்டார்.
மும்பை பந்து வீச்சாளர்களை ஒரு வழி ஆக்கிவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு அவரது பேட்டிங் இருந்தது.அவர்கள் எந்த விதத்தில் பந்தை போட்டாலும் தனது அதிரடியை காட்ட அவர் தவறவில்லை.அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்களை எடுத்து அசத்தினார்.
இதனிடையே போட்டியின் 17-வது ஓவரில் பும்ரா வீசிய யார்க்கர் பந்தை ரிஷப் பண்ட் துல்லியமாக ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார்.இடது கை பேட்ஸ்மேன் ரிஷப் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க,அரங்கமே ரசிகர்களின் அரவாரத்தால் அதிர்ந்தது.ரிஷப் பண்ட் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
— Cricket Chamber (@cricketchamber) March 24, 2019