ஆன்லைனில் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 12, 2019 10:58 AM

திருமணமாகாத பெண் ஒருவர் ஆன்லைனில் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Unmarried woman died while attempting to deliver a baby alone in UP

உத்திரபிரதேச மாநிலம் பாஹ்ரைச் என்னும் பகுதியை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவர், கோராக்பூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அரசு தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்துள்ளார். இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்பு பிலாண்ட்புர் என்னும் பகுதியில் மீண்டும் ஒரு அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பெண் தங்கியிருந்த அறையிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் அப்பெண்ணின் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அந்த இளம்பெண் குழந்தை பெற்ற நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அப்பெண்ணின் அருகில் இருந்த செல்போனை காவல் துறையினர் எடுத்துப் பார்த்ததில் குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பான வீடியோ ஓடி முடிந்த நிலையில் இருந்துள்ளது.

இதனை அடுத்து அப்பெண்ணின் உடலை கைப்பற்றிய போலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகாத இளம்பெண் ஆன்லைனில் வீடியோ பார்த்து குழந்தை பெறும் போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Tags : #UTTARPRADESH #WOMAN #DIED #ONLINEVIDEO #BIZARRE #BABY