‘வாக்களிப்பதை வலியுறுத்தி’ இந்த டாக்டர் செய்யும் வைரல் காரியம்.. அதுமட்டுமில்ல..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 01, 2019 07:40 PM

பொதுவாகவே மருத்துவர்கள் பலரும் சிகிச்சை செய்வதற்கு வசதி இல்லாத ஏழைகளுக்கு உதவும் வகையில் அவர்களிடம் குறைந்த கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுண்டு.

\'do vote in election and get free treatment\', says mangalore doctor

இரண்டு ரூபாய் டாக்டர், ஐந்து ரூபாய் டாக்டர், பத்து ரூபாய் டாக்டர் என பலவிதமான மருத்துவர்கள் நாடு முழுவதும் ஒரு கண்துடைப்புக்காக மட்டுமே ஓரளவு கட்டணங்களை பெற்றுக்கொண்டு, தாங்கள் கற்ற மருத்துவத்தின் பலனாக முழு சிகிச்சையையும் மக்களுக்கு அளிக்கின்றனர். மிகவும் சொற்பமாக ஆங்காங்கே ஒரு சில மருத்துவர்களால் இப்படியான அரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் அவர்களிலிலும் இன்னும் மிகச் சொற்பமாக இருக்கும் சில மருத்துவர்களும் அவர்கள் முன்னெடுக்கும் காரியங்களும் வெளியே தெரிவதில்லை. அப்படி ஒரு மருத்துவர்தான் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்த சருமம் மற்றும் வெண்புள்ளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணரான டாக்டர் ஸ்ரீதர். குறைந்த கட்டணத்தை பெற்றுக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இந்த மருத்துவர் அவ்வப்போது வித்தியாசமான செயல்களை செய்து அனைவரையும் நெகிழ செய்வார் என்பது இந்த வட்டாரத்திற்கே தெரிந்த விஷயம்.

இந்நிலையில் டாக்டர் ஸ்ரீதர் மீண்டும் ஒரு வித்தியாசமான அறிவிப்பை அறிவித்ததோடு தனது மருத்துவமனை முன்பு ஒரு போர்டில் அதனை எழுதியும் வைத்திருக்கிறார். அதன்படி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்திவிட்டு விரல்களில் வாக்களித்ததற்கான அடையாள மையை காண்பித்தால் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்பதுதான் அந்த போர்டில் உள்ள செய்தி.

இது பற்றி டாக்டர் ஸ்ரீதர், வேட்பாளர்கள் சரியில்லை என்பதை காரணமாகச் சொல்லி வாக்களிப்பதில்லை என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. அதனை நாம் நிறைவேற்ற வேண்டியது மிக முக்கியம். அந்த முக்கியத்துவத்தை பலரும் உணர வேண்டி அவர்களுக்கான விழிப்புணர்வு செயலாகவே தான் இதைச் செய்வதாகக் கூறியுள்ளார்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #DOCTOR #MANGALORE #VOTE