'அதிமுக- திமுக' வுக்காக புதிய பாராசூட் பட்டாசுகள்.. இதுல ஒரு விசேஷம் இருக்கு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 01, 2019 12:50 PM

அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் சரி அரசியல் ஆர்வமுள்ள பலருக்கும் சரி தேர்தல் சீசன் வந்தால் அதனை திருவிழா மாதிரி கொண்டாடும் மனப்பான்மைதான் இருக்கும்.

New Crackers Introduced to Cover AIADMK and DMK cadres here is how

மக்களவைத் தேர்தல், தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் என தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் ஒரு பக்கம் தேர்தல் சின்னம், கட்சி சின்னம், வேட்பாளர்கள், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் தொடங்கி, பிரச்சாரம் செய்வது, விளம்பரங்களை உருவாக்கிக் கொள்வது, சர்ச்சைகள், எதிர்பாராத விதமான சம்பவங்கள் என பலவும் நிகழத் தொடங்கிவிட்டன.

முக்கிய கட்சிகள் பலவும் தங்களுக்கான தேர்தல் அறிக்கையினை உருவாக்கியுள்ளன. இன்னும் சில கட்சிகள் இப்போதே தொடங்கப்பட்டு இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆக, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பான திருப்பங்களையும் அதிரவைக்கும் புதுமைகளையும் இந்தத் தேர்தலில் பார்த்துவரும் நிலையில் தொண்டர்களும் தங்கள் தலைவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பட்டாசுகளெல்லாம் வெடித்து ஜமாய்க்கிறார்கள்.

இதற்கென புதுக்கோட்டையில் திமுக- அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வண்ணங்கள் வருமாறு பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. முன்னதாக அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்களின் ஸ்டிக்கர்கள் என பலவும் விற்பனையாகிவரும் நிலையில் இந்த பாராசூட் வெடிகள் அரசியலாளர்களிடையே நன்றாக விற்பனையாவதாகவும், வானத்தில் சென்று வெடிக்கும் இந்த பாராசூட் வெடிகள், குடை வடிவத்தில் விரிந்து கட்சிகளின் வண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் கூறுகின்றனர்.

இப்போதைக்கு அதிமுக- திமுக ஆகியவற்றுக்கு மட்டுமான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாகவும், இந்த பாராசூட் பட்டாசுகள் ரூ.360 முதல் ரூ.600 வரை விற்கப்படுவதாகவும் புதுக்கோட்டையில் முதல்வர் பிரச்சாரம் செய்வதால் இந்த பாராசூட் பட்டாசுகள் விற்றுத் தீர்வதாகவும் வியாபாரிகள் கருதுகின்றனர்.