‘டிக்டாக் வீடியோ காதலால் இளைஞர் கைது..’ அவருடன் தான் இருப்பேன் என அடம்பிடித்த பள்ளி மாணவி..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 12, 2019 01:03 PM

டிக்டாக் வீடியோ மூலம் பள்ளி மாணவியை காதலிக்க வைத்த இளைஞர் கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

tik tok love youth arrested for kidnapping school girl in chennai

சென்னை வடபழனியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அந்தப் பள்ளி மாணவி அசார் என்ற இளைஞரை சந்தித்துள்ளார். பின்னர் டிக்டாக் வீடியோ மூலம் மாணவியைக் காதலிக்க வைத்துள்ளார் அவர். 10ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி சில தினங்களுக்கு முன் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் வீடு திரும்பிய மாணவி அந்த இளைஞருடன் வந்துள்ளார். அசாரைக் காதலிப்பதாகவும், அவருடன் தான் சேர்ந்து வாழப்போவதாகவும் அவர் சொல்ல அதைக் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக மாணவியின் தாய் சூளைமேடு காவல் நிலையத்துக்கு ரகசியமாக செல்ஃபோன் மூலம் தகவல் அளித்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த போலீஸார் அசார் மற்றும் மாணவியைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதும் அந்த மாணவி அசாரைப் பிரிந்து வாழ முடியாது என பிடிவாதமாகக் கூறியுள்ளார். இதுபற்றி போலீஸ் தரப்பில், “மாணவிக்குத் தேவையான கவுன்சிலிங் கொடுத்து அனுப்பியுள்ளோம். டிக்டாக் வீடியோ பற்றிய விழிப்புணர்வையும் அவருக்கு ஏற்படுத்தியுள்ளோம்” எனக் கூறியுள்ளனர். மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : #TIKTOK #LOVE