'ஃபெயில் ஆனது உன்னாலதான்.. ஃபீஸ் கட்டுறியா இல்ல அந்த ஃபோட்டோஸ எல்லாம்..'.. மிரட்டிய காதலன்.. காதலி அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 11, 2019 05:16 PM

தான், தேர்வு சரியாக எழுதாததற்கு தன் காதலிதான் காரணம், என்று கூறி, தேர்வுக்கட்டணத்தை காதலியையே கட்டச் சொல்லி வலியுறுத்திய இளைஞர் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தேர்வில், தான் தோல்வியடைந்ததற்கு காதலிதான் காரணம் என்று குற்றம் சாட்டிய இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிடம் இருந்து தனக்கான தேர்வுக் கட்டணத்தை இழப்பீடாகக் கேட்டு தொந்தரவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

college student blamed girlfriend for his poor exam result & tortured

மகாராஷ்டிர மாநிலம் பீட் நகரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். எப்போதும் நன்றாக படிக்கும் மாணவராக பெயர் பெற்றிருந்த இந்த இளைஞர், தனது கல்லூரிப் படிப்பின் முதலாம் ஆண்டுத் தேர்வில் தோல்வியுற்றதால் இரண்டாம் ஆண்டு செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார்.

இந்த சூழலில், தேர்வில் தனக்கு கவனம் குறைந்ததற்கு தன் காதலிதான் காரணம் என குற்றம் சாட்டியதோடு, அந்த தேர்வை மீண்டும் எழுதுவதற்கான தேர்வு கட்டணத்தை காதலியிடமே கட்டச் சொல்லி அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் அந்த பெண் இதை புறக்கணித்ததால், மீண்டு மீண்டும் தொந்தரவு செய்ய ஆரம்பித்த இந்த இளைஞர், ஒரு கட்டத்தில் தன்னுடம் அந்த பெண் எடுத்த புகைப்படங்களை வெளியிடுவதாகவும், அந்த பெண்ணின் அப்பாவிடம் இந்த காதல் விவகாரத்தைன்சொல்லுபோவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்

ஆனால் அவருக்கு முன்னரே முந்திக்கொண்ட அந்த இளம் பெண், தன் அப்பாவிடம் தன் காதல் பற்றியும், தன் காதலர் இப்படி செய்வதைப் பற்றியும் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த இளைஞர் மீது, அந்த பெண்ணின் அப்பா புகார் அளித்ததை அடுத்து, பணம் கேட்டு மிரட்டுதல், அச்சுறுத்துதல், சீட்டிங் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Tags : #COLLEGESTUDENT #EXAM #LOVE