'செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ''பெண்''... 'தர தரவென இழுத்து செல்லும்'...பதைபதைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 25, 2019 09:19 AM

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட பெண் மற்றும் மற்றோரு நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

33-year-old woman was arrested for robbing purse in Delhi

டெல்லி சாணக்யபுரி பகுதியில் 53 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பைக்கில் வந்த இருவர் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த செல்போனை பறிக்க முற்பட்டனர்.ஆனால் அவர் விடாமல் இருக்கவே,அந்த பெண்ணை தரையில் சில மீட்டர்கள் தூரம் கொள்ளையர்கள் இழுத்து சென்றனர்.இது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இதனிடையே சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,நிஹால் விகார் பகுதியை சேர்ந்த ரமன்ஜீத் கவுர் என்ற பெண்ணையும் அவரது நண்பரையும் கைது செய்தனர்.காவல்துறையினரின் கவனத்தை திசை திருப்புவதற்காக,பைக்கில் சென்ற அந்தப் பெண், ஆணைப் போன்று உடை அணிந்திருக்கிறார்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பைக் மற்றும் ஸ்கூட்டர், 53 வயது பெண்ணிடம் பறிக்கப்பட்ட பர்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே கைது செய்யப்பட்ட ரமன்ஜீத் கவுர்,திருமணமானவர்.அவர் ஏற்கனவே கணவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் தற்போது வெளியான சிசிடிவி காட்சிகள் டெல்லி மக்கள் மத்தியில் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHAINSNATCHING #POLICE #CCTV #DELHI #DELHI BIKER