‘சாலையில் நின்ற பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற இருவர்’.. பதற வைக்கும் காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 12, 2019 05:18 PM

சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தரதரவென இழுத்து செல்லும் சிசிடிவி காட்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Two bike snatchers dragging a woman on the road, Caught on CCTV

டெல்லியில் பெண் ஒருவர் சாலையோரமாக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்துகொண்டு இருசக்கரவாகனத்தில் வந்த இருவர் திடீரென அப்பெண்ணின் புடவைப் பிடித்து இழுக்கின்றனர்.

இதை சற்றும் எதிர்பாராத அப்பெண் நிலைதடுமாறி கீழே விழுகிறார். இதனை அடுத்து அப்பெண்ணை சாலையில் தரதரவென இழுத்துக் கொண்டே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்கின்றனர்.

இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் செயின் பறிக்கும் நோக்கில் பெண்ணைத் தாக்கினார்களா? இல்லை வேறு எதும் காரணம் உள்ளதா? என்கிற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #DELHI #CRIME #WOMAN #BIKESNATCHERS #CCTV