‘கத்தியைக் காட்டி செல்போன் பறிக்க முயன்ற மர்ம நபர்கள்’.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 04, 2019 09:14 PM

சென்னையில் காவலாளியை தாக்கி செல்போன் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Thieves attacked security officer to steal his mobile - CCTV

சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சந்திரசேகரன் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சந்திரசேகரனிடம் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது சந்திரசேகரன் செல்போனை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் சந்திரசேகரனின் கையில் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தாக்கியதால் காயமடைந்த சந்திரசேகரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சாலையில் சென்றுகொண்டிருந்த காவலாளியிடம் செல்போனை கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI #CCTV #THIEVES #BIZARRE