‘திடீரென பாக்கெட்டில் இருந்து வெடித்து சிதறிய செல்போன்’.. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 06, 2019 04:59 PM

செல்போன்கள் வெடிக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்த சம்பவம் பயத்தை உண்டாக்கியுள்ளது.

Factory worker’s smartphone explodes in pocket, caught on cctv camera

மும்பை சாகா என்கிற பகுதியில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் இளைஞர் ஒருவர் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியான அவர் உடனே தன் பாக்கெட்டில் எரிந்து கொண்டிருந்த செல்போனை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். இதனால் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதற்குமுன் ராஜஸ்தான் மாநிலத்தில் முதியவர் ஒருவர் தன் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்த அதிர்ச்சியில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இளைஞர் ஒருவர் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #MUMBAI #CELLPHONE #BLAST #CCTV #BIZARRE #VIRALVIDEOS