செகண்ட் புளோரில் மட்டும் திருடும் விநோதமான ‘ஸ்பைடர்மேன்’ திருடன்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 06, 2019 11:31 AM

டெல்லியில் இரண்டாம் தளத்தில் மட்டும் சென்று திருடும் விநோத திருடனை போலீஸார் பிடித்துள்ளனர்.

2nd floor fame Spiderman thief arrested by Delhi police here is how

டெல்லி திலக் நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரை அங்கிருப்பவர்கள் ஸ்பைடர்மேன் ரவி என்றுதான் அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர். திருடுவதில் சில சுவாரஸ்யமான திருடர்கள் தங்களது திருடு முறையானது வரலாறு நெடுக பேசப்பட வேண்டும் என்று விரும்புவதுண்டு.  அப்படித்தான் ஸ்பைடர்மேன் ரவி, தன்னைப்பற்றி போலீஸாரில் இருந்து பலரும் பேச வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.  அதனால் இவர் திருடுவது எல்லாமே அதிகபட்சமாக 2வது தளம், முடியவில்லை என்றால் முதல் தளம்.

வடிகால் குழாய்கள் வழியாக ஏறி, முதல் தளம் அல்லது இரண்டாவது தளத்தின் பால்கனிகளை டார்கெட் செய்து அவற்றின் வழியாக உள்ளிறங்குவதே இவர் தனக்கென வைத்திருக்கும் தனி ஸ்டைல். இதேபோல் இவருக்கென தனி விதமான டிரெஸ் கோடு ஒன்று இருக்க வேண்டும் என்றும் ரவி நினைத்திருக்கிறார்.

அதனால் சிவப்பு நிற டி-ஷர்ட் அல்லது  சிவப்பு நிற ஜெர்ஸியை அணிந்து திருடத் தொடங்கியுள்ளார். டெல்லியில் அடிக்கடி வரும் புகார்களை  சேகரித்து, அவற்றைத் தொகுத்து ஆய்வு செய்தபோது அவற்றில் பொதுவான காரணிகளை வைத்துப் பார்த்ததில் சுமார் 7-ல் 6 திருட்டுக்கள் ஒரே மாதிரியாக இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த இடங்களில் எல்லாம் ரவி தன் கைவரிசையைக் காட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து டிஜிபி மோனிகா பரத்வாஜ் தலைமையிலான போலீஸார் குழு, ஸ்பைடர் மேன் ரவியை சுபாஷ் நகரில் உள்ள பசுபிக் மாலில் வைத்து பிடித்துள்ளனர்.   இதனையடுத்து கீர்த்தி நகர் காவல் நிலையத்தில் கைதான வழக்குகளின் படி, இந்திய குற்றவியல் பிரிவு 380-ன் கீழ் ஸ்பைடர்மேன் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : #THIEF #DELHI #BIZARRE