‘கட்டிப்பிடித்து காதலைத் தெரிவித்த ஜோடி’.. கைது செய்த காவல்துறை.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 12, 2019 06:10 PM

ஈரானில் பொது வெளியில் காதலைத் தெரிவித்த காதல் ஜோடியை அந்நாட்டு காவல்துறை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Man publicly proposes to woman at shopping mall

கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய நாடான ஈரானில் அரோக் என்னும் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஆண் ஒருவர் பெண்ணுக்கு தன் காதலைத் வெளிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

அந்த வீடியோவில் வணிக வளாகத்தின் நடுவே, ஆண் ஒருவர் பெண்ணின் கையில் மோதிரத்தை அணிவித்து தனது காதலை வெளிப்படுத்துகிறார். பின்னர் இருவரும் மகிழ்ச்சியாக கட்டி அணைத்துக்கொள்கின்றனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து இவர்கள் இருவரையும் இஸ்லாமிய மத நெறிமுறைகளுக்கு எதிராக நடந்து கொண்ட குற்றத்திற்காக கைது செய்த அந்நாட்டு காவல்துறை, பின்னர் ஜாமில் விடுதலை செய்துள்ளது.

Tags : #IRANIAN #LOVEPROPOSAL #POLICE #VIRALVIDEO