'அவ தூங்கப் போயிருப்பான்னு சொன்னாரு’..பெண் பல்மருத்துவர் வழக்கில் திருப்பம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Mar 06, 2019 02:32 PM

ஆஸ்திரேலியாவில் டெண்டிஸ்டாக பணிபுரிந்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண்ணான ப்ரீத்தி ரெட்டி. இவர் கடந்த 3-ஆம் தேதி காணாமல் போனதாக இவரது குடும்பத்தினர் போலீஸாரில் புகார் அளித்திருந்தனர்.

Indian origin Australian womans dead body found in suit case - Bizzar

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்த ப்ரீத்தி ரெட்டி காணாமல் போனதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரைக் காணவில்லை என்று அளித்த புகாரின் பேரில் போலீஸார் இவ்வழக்கை விசாரித்து நிலையில் ப்ரீத்தியின் தினசரி போக்குவரத்துகள் ஆராயப்பட்டன.  இதனிடையே ப்ரீத்தி ரெட்டியின் காரும் காருக்குள் சடலமாகக் கிடந்த ப்ரீத்தி ரெட்டியின் பூதவுடலும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து ப்ரீத்தி ரெட்டி அன்றைய தினத்தில் பல் மருத்துவம் தொடர்பான கருத்தரங்கிற்குச் சென்றுவிட்டு பின்னர் அதே நாளில் தன் பழைய காதலருடன் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர் ப்ரீத்தி ரெட்டி உணவகம் ஒன்றில் காத்திருந்ததும் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றை வைத்துக்கொண்டு போலீஸார் ப்ரீத்தி ரெட்டியின் பழைய காதலரை விசாரித்தபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என மறுத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து போலீஸார் அந்நபரை விசாரித்து வந்த நிலையில், அண்மையில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் அந்நபர் தலையில் பலத்த அடிபட்டு பலியாகியுள்ள சம்பவம் போலீஸாரை மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

ஆனால் அந்த நபரின் பெயர் ஹர்ஷவர்த்தன் என்பதும், அவர் ப்ரீத்தியை சந்தித்த பிறகுதான் ப்ரீத்தி காணாமல் போனார் என்பதையும் அவரது தோழி ஒருவர் கூறியுள்ளார். மேலும், ப்ரீத்தி பற்றி அவரிடம் கேட்டபோது, தற்போதுதான் சந்தித்தேன், ப்ரீத்தி தூங்கியிருப்பாள் என அவர் அந்த தோழியிடம் கூறியதாகவும் ஆனால் அடுத்த நாள் ஹர்ஷவர்த்தன் விபத்தில் பலியானதாகவும் அந்த தோழி தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதேபோல் ப்ரீத்தியின் தற்போதைய காதலர் ப்ரீத்தி நாம் மீண்டும் சந்திப்போம் நிச்சயமாக என சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

Tags : #CRIME #BIZARRE #POLICE