‘தல’யின் கேள்விகளுக்கு தமிழில் பதிலளித்த ஜிவா தோனியின் க்யூட் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 25, 2019 12:14 AM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது மகளுடன் தமிழில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Dhoni\'s Daughter Ziva learns Language Lessons

ஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசனின் தொடக்கப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 17.1 ஓவரின் முடிவில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவரின் முடிவில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 71 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி தனது மகளுடன் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #WHISTLEPODU #YELLOVE 🦁💛 #CSK #MSDHONI #ZIVADHONI #VIRALVIDEO