அஞ்சு பேராக வந்ததால் நிகழந்த சோகம்.. சிசிடிவியில் வைரலான விபத்து சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 09, 2019 08:55 PM

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஐந்து பேர் டெம்போ மோதி பறந்து விழும் சோகமான சம்பவம் சிசிடிவி காட்சிகளின் மூலம் வெளியாகியதை அடுத்து பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Accident due to more number of persons in one bike goes bizarre

சாலைப் போக்குவரத்தின்போது நிகழும் கோரமான விபத்துக்கள் பலவற்றையும் ஆங்காங்கே உள்ள சிசிடிவி காட்சிகள் வெளிக்கொணர்ந்து வருகின்றன. அவற்றை பொதுமக்களின் பார்வைக்கு விடப்படும்பொழுது யார் மீது தவறு, யார் சரியாக வந்தார்கள் என்பதையும் தாண்டி, அடிக்கடி விபத்துக்கள் நேரும் வாய்ப்பிருக்கும் சூழலில், நாம் நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டிய அவசியத்தை இந்த வீடியோக்கள் வலியுறுத்துகின்றன.

அவ்வகையில் தெலுங்கானாவில் சமீபத்தில் ஒரு சிசிடிவி கேமிராவில் பதிவாகிய இந்த வீடியோவும் இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது. அதில் தனக்கு முன்புறம் குழந்தை அமர்ந்திருக்க, பின்புறம் பெண் உட்பட 3 பேரை அமரவைத்து ஒருவர் சாலையில் பைக்கை ஓட்டிவருகிறார். இந்த பைக் சாலையை கடக்க முயலும் போது எதிரே சரக்குகளை ஏற்றி வந்த டெம்போ ஒன்று பைக் மீது மோதுகிறது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த மோதலில் பைக்கில் வந்த 5 பேரும் தூக்கி வீசப்படுகின்றனர். சாலையில் இருந்த பொதுமக்கள் டெம்போ மோதி வீசப்பட்ட குடும்பத்துக்கு உதவ ஓடி வருகின்றனர்.

சிசிடிவி கேமராவில் பதிவான இந்த அதிர்ச்சிகரமான விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்லுதல் ஆபத்தானது என்று இந்த குடும்பம் உணர்ந்திருக்கலாம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Tags : #ACCIDENT #BIZARRE #CCTV