கடைகளுக்கு காரில் போய் பட்டுப்புடவை திருடும் கும்பல்.. சிசிடிவியை வைத்து பிடித்த போலீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 08, 2019 06:05 PM
ஆந்திராவைச் சேர்ந்த கும்பல் ஒன்று தமிழ்நாட்டின் பல ஜவுளிக்கடைகளுக்கு காரில் வந்து பட்டுப்புடவை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமங்கலத்தில் வாகனச் சோதனையில் இருந்த போலீஸார், அவ்வழியில் வந்த கார் ஒன்றை மடக்கி ஆய்வு செயுததில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் நபர் அந்த காரில் இருந்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த கனகதுர்கா, நாகமணி, மேனா மற்றும் பாலு மகேந்திரா என்கிற பெயர்களை உடைய அந்த கும்பலின் மீது சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை விசாரித்துள்ளனர்.
முன்னதாக சென்னை, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல ஜவுளிக்கடைகளுக்கு காரில் சென்று பட்டுப்புடவைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட கும்பலின் கார் நம்பர்கள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. அந்த கார் நம்பர் இந்த கும்பலின் கார் நம்பருடன் பொருந்தியதை வைத்து போலீஸார் இந்த கும்பலை பிடித்துள்ளனர்.
சென்னையைப் பொருத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி அசோக் நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு காரில் சென்ற இந்த கும்பல், அங்கு புடவைகளைத் திருடியதற்கான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.