‘கேப்டனின்’ மனைவி வாங்கிய மொக்கை.. வெச்சு செஞ்ச வீரர்.. உஷாரான ஜடேஜா’.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 29, 2019 07:10 PM

தல தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் மோகித் ஷர்மாவிடம் மொக்கை வாங்கியதாக இணையதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Sakshi Dhoni, jadeja fall prey to the pun of Mohit Sharma viral video

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்முரமாக வெற்றிகளை சுவைத்து விளையாடத் தொடங்கியுள்ளது. தோனி, ரெய்னா, ஜடேஜா, ராயுடு, பிராவோ என உலகம் முழுவது ரசிகர்களை தனதாக்கிக் கொண்ட முக்கியமான வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளதால் இந்த அணியின் எல்லா மேட்சுகளுக்கும் எல்லா விதமான ரசிகர்களுமே இருக்கச் செய்கின்றனர்.

இவர்களோடு இதே அணியில் இருக்கும் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் உள்ளிட்ட வீரர்கள் அவ்வப்போது மாஸ் தமிழ்ப் படங்களின் மற்றும் மாஸ் தமிழ்ப்பட ஹீரோக்களின் பஞ்ச் வசனங்களை ஸ்கிரீனில் பேசி பட்டையை கிளப்புவதுண்டு. அதற்கு உதாரணமாய் ஹர்பஜன் சிங் டெல்லி அணியை மையப்படுத்தி தமிழில் போட்ட ட்வீட் வைரலாகியது.

இந்த நிலையில் வரும் ஞாயிறு அன்று சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சென்னை அணி மோதுகிறது. இதில் விளையாட வந்த  வீரர்கள் வந்தவண்ணம் இருக்க, உடன் வீரர்களது மனைவிகள், குழந்தைகளும் சென்னைக்கு வந்துள்ளனர். அப்போது விமானத்தில் அனைவரும் கலகலவென பேசிக்கொண்டு விளையாடி வந்துள்ளனர்.

அந்த சமயத்தில் சாக்‌ஷி தோனியிடம், வேகப்பந்து வீச்சாளர் மோஹித் ஷர்மா 100-ல் இருந்து பத்தை எத்தனை முறை கழிக்க முடியும் என்று கேட்க, அதற்கு சாக்‌ஷி 10 முறை என்று கூறியிருக்கிறார். ஆனால் மோஹித்தோ, ’முடியாது.. எப்படி முடியும். 100லிருந்து ஒருமுறை பத்தை கழித்துவிட்டாலே மீதம் இருப்பது 90தானே? பிறகெப்படி 100 லிருந்து 10ஐ 10 முறை கழிக்க முடியும்’ என்று திருப்பி கேட்டு மொக்கை தந்துள்ளார். மொக்கை வாங்கிய சாக்‌ஷி தோனி கொடுத்த வெட்க ரியாக்‌ஷன் வைரலானது.

ஆனால் ஜடேஜா தப்பித்துக்கொண்டார். அவரிடமும் மோஹித் ஷர்மா, ‘உங்க வீட்டு கோழி பக்கத்து வீட்டுக்கு சென்று முட்டையிட்டால், அந்த முட்டை யாருக்கு சொந்தம்?’ என்று கேட்டுள்ளார். ஆனால் ஜடேஜா உஷாராக, ‘யார் வீட்டுக்கு சென்று முட்டை போட்டாலும் முட்டை கோழிக்குத்தான் சொந்தம்’ என்று அதிரடியாய் கூறியுள்ளார். இந்த வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

Tags : #IPL #IPL2019 #MSDHONI #RAVINDRA JADEJA #SAKSHI DHONI