ஹாட்ரிக் 6,6,6.. மரண காட்டு காட்டிய யுவராஜ் சிங்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 28, 2019 10:31 PM
பெங்களூரு ராயல் சேல்ஞ்சர்ஸ் அணி வெற்றி பெற 188 ரன்களை இலக்காக மும்பை அணி வைத்துள்ளது.
ஐபிஎல் டி20 லீக்கின் 7 -வது போட்டி இன்று(28.03.2019) பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன.
முன்னதாக நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வியைத் தழுவுயது. அதே போல டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியும் தோல்வியடைந்துள்ளது.
இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் இன்று நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறவேண்டிய முனைப்பில் உள்ளன.
இந்நிலையில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 48 ரன்களும், யுவராஜ் சிங் 23 ரன்களும், சூர்யக்குமார் யாதவ் 38 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களும் எடுத்திருந்தனர். அதில் யுவராஜ் சிங் பெங்களூரு அணியின் வீரர் சஹால் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடுத்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடி வருகிறது.
6, 6, 6 & Out – Vintage Yuvraj recreates old magic https://t.co/k3aH9oRwih
— Sports Freak (@SPOVDO) March 28, 2019