பாக்ஸிங்கில் இறங்கிய சென்னை அணியின் ’சின்ன தல’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 29, 2019 04:38 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'சின்ன தல' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாக்ஸிங்கில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Chinna Thala \'Southpaw\' Raina video goes viral on social media

கடந்த மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய 12வது ஐபிஎல் சீசன் பலராலும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து சென்னையில் நடந்த ஹோம் மேட்சில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்றது.

தல தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பின்னர் தனது 2-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.  தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31-ஆம் தேதி) எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாக்ஸிங்கில் ஈடுபட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.