ஆர்சிபி வீரரை பின்னுக்கு தள்ளி புதிய சரித்திரம் படைத்த நம்ம ‘தல’ தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 28, 2019 01:13 AM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முந்தியுள்ளார்

IPL 2019: MS Dhoni overtakes AB de Villiers in most sixes in IPL

சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான 5 -வது ஐபிஎல் டி20 லீக் போட்டி நேற்று(26.03.2019) டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 147  ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் இரண்டு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது. இப்போட்டியில் வாட்சன் 26 பந்தில் 44 ரன்களை அடித்து அசத்தினார்.

மேலும் இப்போட்டியில் விளையாடிய தோனி, ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆர்சிபி வீரர் ஏபி டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் 186 சிக்ஸர்களுடன் ஏபி டிவில்லியர்ஸ் 3 -வது இடத்திலும், 187 சிக்ஸர்களுடன் தோனி 2 -வது இடத்திலும், 296 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

Tags : #IPL #IPL2019 #MSDHONI #CSK #WHISTLEPODU #YELLOVE