'அவர் என்ன அப்படி செஞ்சாரு'...ஏன் அப்படி 'சிரிச்சீங்க'?...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Mar 29, 2019 10:44 AM

ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியின்போது கோலி சிரித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Kohli\'s bemused reaction as Rohit Sharma blistering boundary

நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.முதலில் களமிறங்கிய  மும்பை அணி வீரர்கள்,ரோஹித் 48, சூர்யகுமார் 38, டிகாக், யுவராஜ் தலா 23  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 31 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதனிடையே மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் போட்டியின் போது ரோஹித் சர்மா அடித்த பந்து பௌண்டரிக்கு செல்ல அதனை பார்த்த கோலி புன்சிரிப்போடு நடந்து சென்றார்.ஆர்சிபி வீரர் முகமது சிராஜ் வீசிய பந்தை ரோஹித் சர்மா பௌண்டரிக்கு விரட்டினார்.முன்னதாக ஆர்சிபி 20 ஓவரில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆர்சிபி தரப்பில் டிவில்லியர்ஸ் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலி 46, பட்டேல் 31 ரன் குவித்தனர். மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்