என் முறுக்கு மீசைக்கு இன்ஸ்பிரேஷனே தவான் தான்.. பிரபல ஐ.பி.எல். வீரர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Mar 29, 2019 01:54 PM

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகார் தவானின் மீசையை போன்றே, மீசை வைக்க விரும்பிய நியூசிலாந்து வீரரின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

lockie ferguson says inspiration from dhawan moustache

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நியூசிலாந்து வீரர் லாக்கி ஃபெர்குசான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் வைத்துள்ள மீசை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பார்ப்பவர்கள் அனைவரையும் பெரிதும் ஈர்த்துள்ளது. 1960-களில் கார்ட்டூன்  வில்லன்கள் வைத்திருப்பது போன்ற மீசையுடன் வலம் வரும் அவரிடம், "ஏன்? இந்த மீசை ஆசை" என்று கேட்டால் பெரிய காரணம் ஒன்றை சொல்லி அதிர வைக்கிறார்.

'இந்தியாவில் மோவம்பர் பற்றி தெரியுமா?' என்று தெரியவில்லை. ஆனால் 'ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில், நவம்பர் மாதம் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மீசை வளர்ப்பது வழக்கம். அதாவது, மனித உடலின் முகத்தை மாற்ற விரும்புவது எனறு அர்த்தம். அதற்காக மீசை வளர்க்கிறேன்' என்று ஃபெர்குசான் கூறியுள்ளார். இதனை 'எத்தனை பேர் விரும்புவார்கள் என்று தெரியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் இதை விரும்புகிறேன்' என நியூசிலாந்து வீரர் ஃபெர்குசான் தெரிவித்துள்ளார்.  (Moustache -ல்  mo, November -ல் உள்ள vember சேர்ந்ததுதான் movember).

'சிலர் இதைப் பார்த்து சிரிப்பார்கள். பெரிய திரையில் மீசையுடன் என்னை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் ஃபெர்குசான் கூறியுள்ளார்.  மேலும் அவர் தெரிவிக்கையில், இந்திய வீரரும், டெல்லி கேபிடல்ஸ் அணி வீரருமான ஷிகார் தவான் பெரிய மீசை வைத்திருப்பார். அவர் நியூசிலாந்து வந்தபோது அவரது ரசிகனாகிவிட்டேன். இருந்தாலும் அவர் மீசையை முறுக்கிவிட்டு இருப்பார். அதேபோல் முறுக்கிவிட்டு வைக்கவேண்டும் என்ற ஆசையால், தற்போது அப்படி வைத்துள்ளேன். கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக, டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடும்போது இப்படி மீசையை முறுக்கிவிடும்படி தவானிடம் வலியுறுத்துவேன். ஆனால், இந்த மீசையை பாதுகாப்பது கடினமாக உள்ளது' என்று ஃபெர்குசான் கூறியுள்ளார்.

Tags : #IPL #IPL2019 #KKR #LOCKIEFERGUSON #MOUSTACHE